இஸ்லாமியர்களின் புனித நகரமான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் பிரம்மாண்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
சவூதியின் அமாத் மலைப்பகுதிகளில் (Amad Mountain) உள்ள மரங்கள் தீயினால் எரிந்துவருவதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அல் தைஃப் நகர (Al Taif city) சிவில் பாதுகாப்புப் படையினர் தீயினை அணைக்க போராடிவருவதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
#مدني_ميسان
يباشر حريق اندلع بمجموعة أشجار
في جبل ” عمد ” بمركز ثقيف
.. لازالت الفرق تعمل على إطفاء الحريق#حريق_جبل_عمد pic.twitter.com/je9PMJVq3M— إمارة منطقة مكة (@makkahregion) September 16, 2020
மக்கா நகர அதிகாரிகளால் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மலைப் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்க்க முடிகிறது.
இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சவூதி சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
تباشر فرق #الدفاع_المدني في محافظة #الطائف إطفاء حريقاً اندلع في جبل عمد بمركز ثقيف ، ومازالت عمليات إخماد الحريق والسيطرة عليه مستمرة ، ولا يوجد إصابات ولله الحمد. pic.twitter.com/XVvpOijAmT
— الدفاع المدني السعودي (@SaudiDCD) September 17, 2020