police
Image Credits- Riyadh Xpress

கொரோனா விதிமீறல்களும் அதற்கான அபராதங்களும்..!

சவூதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திறமையான அதிகாரிகள் மூலம் வகுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் நெறிமுறைகளோடு, அவற்றின் மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. ஒரே குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் அல்லாமல், ஏதேனும் குடும்ப நிகழ்வுகளுக்காக ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது வீடு மற்றும் ரெஸ்ட் ஹவுஸ் (rest house) போன்றவற்றில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடினால் 10,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும்.
  2. குடும்ப உறவுகள் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, கேம்ப்ஸ் (camps) அல்லது வீட்டிலோ, ரெஸ்ட் ஹவுஸ் மற்றும் திறந்தவெளி போன்ற பகுதியிலோ 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடினால் 15,000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும்.
  3. துக்க நிகழ்வுகள், பார்ட்டிகள் (parties) மற்றும் சமூக நிகழ்வுகளில் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடினால் 40,000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும்.
  4. ஒன்றாக வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களின் வீடுகளைத் தவிர ஏதேனும் ஒரு வீட்டிலோ, ரெஸ்ட் ஹவுஸிலோ அல்லது கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் கட்டிடத்தின் உள்ளேயோ ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடினால் 50,000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும்.
  5. கடைகளின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக வகுக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையை மீறினாலோ அல்லது கடைக்கு உள்ளேயோ வெளியேயோ கூட்டமாக கூடினாலோ 5000 சவூதி ரியால் அபராதமாக விதிக்கப்படும். அதுமட்டுமின்றி நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைகளை மீறும் ஒவ்வொரு நபருக்கும் 100 சவூதி ரியால் வரை அபராதமாக விதிக்கப்படும்.
  6. தனியார் துறை நிறுவனங்களுக்காக வகுக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான, மருத்துவ அல்லது துணி முககவசங்களை அணியாதவர்களை உள் நுழைய அனுமதிப்பது, நியமிக்கப்பட்ட இடங்களில் கிருமிநாசினிகள் மற்றும் ஸ்டெர்லைசர்களை வைக்காமல் இருப்பது, மால்கள் மற்றும் கடைகளின் நுழைவாயில்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்க்க தவறுவது, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு ஷாப்பிங் கார்ட்ஸ் (shopping carts) மற்றும் கூடைகளை கிருமி நீக்கம் செய்ய தவறுவது, குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடை சரி பார்க்கும் அறைகள் போன்றவற்றை மூடாமல் திறந்து வைத்து இருப்பது போன்ற செயல்களுக்காக 10,000 சவூதி ரியால் வரை அபராதமாக விதிக்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று முதல் ஆறு வரையுள்ள விதி மீறல்களை இரண்டாம் முறை மறுபடியும் செய்தால் இரட்டிப்பாக அபராதம் விதிக்கப்படுவதோடு, மூன்று மாத காலத்திற்கு சம்மந்தப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று முதல் ஆறு வரையுள்ள விதிமீறல்களை மூன்றாம் முறையாக மீண்டும் செய்தவர்களுக்கு, முதல் முறையாக மீண்டும் செய்ததற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை விட இரண்டு மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆறு மாத காலத்திற்கு சம்மந்தப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மூடப்படுவதோடு, பொது வழக்கு விசாரணைக்கும் உட்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முககவசம் அணியாமலிருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமலிருப்பது, பொது அல்லது தனியார் இடங்களில் நுழையும்போது வெப்பநிலையை சரிபார்க்க மறுப்பது, வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை பின்பற்றத் தவறுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேண்டுமென்றே மீறினால் 1000 சவூதி ரியால் வரை அபராதமாக விதிக்கப்படும். ஒருவேளை விதிமீறலை மீண்டும் செய்தால் அபராதம் இரட்டிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று முதல் ஐந்து விதிமீறல்கள் படி எந்தவொரு கூட்டம் சேரக்கூடிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள், அதற்காக அழைப்பு விடுப்பவர்கள் மற்றும் அதில் கலந்து கொள்பவர்களுக்கு 5000 சவூதி ரியால் வரை அபராதமாக விதிக்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று முதல் ஐந்து விதிமீறல்கள் படி எந்தவொரு கூட்டம் சேரக்கூடிய நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்பவர்கள், அதற்காக அழைப்பு விடுப்பவர்கள் மற்றும் அதில் கலந்து கொள்பவர்கள் மீண்டும் அதை விதிமீறலை செய்யும் பட்சத்தில் 10,000 சவூதி ரியால் வரை அபராதமாக விதிக்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று முதல் ஐந்து விதிமீறல்களை மூன்றாம் முறையாக மீறும் பட்சத்தில் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!