covid-19
Image Courtesy : timesofisrael.com

சவூதியில் ஒரு பெண்ணின் மூலம் மூன்று குடும்பங்களுக்குப் பரவிய கொரோனா !

தொற்று பரவுதலைத் தடுக்க அரசாங்கம் கடுமையாகப் போராடி வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து புதிதாக மூன்று குடும்பங்களுக்கு தொற்று பரவியுள்ளதாக சவூதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு சமூகக் கூடுகையில், அடையாளம் அறியப்படாத பெண்ணிடமிருந்து கை குலுக்குதல் மற்றும் கட்டி அணைத்தல் மூலமாக அக்குடும்பங்களுக்கு தொற்று பரவியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இணைய நாளிதழ் Sabq – வின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று நபர்கள் உட்பட மொத்தம் 9 பேர் நோய் தொற்று உடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சமீபத்திய வாரங்களில், நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை சவுதி அரேபியா முடுக்கிவிட்டுள்ளது.

பெரிய அளவிலான கூடுகைகளுக்குத் தடை மற்றும் சமூக விலகலைக் கடைபிடிப்பது உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து மக்களை வலியுறுத்தியுள்ளனர். இதுவரை கோவிட் – 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,011 இறப்புகள் உட்பட 1,32,048 ஆக உள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!